Wednesday, December 25, 2024
HomeLatest Newsகுரங்கு அம்மை தடுப்பூசி வெற்றியளித்ததா? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

குரங்கு அம்மை தடுப்பூசி வெற்றியளித்ததா? உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

குரங்கு அம்மை வைரஸ் தொற்றைத் தடுக்க கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பு தடுப்பூசி 100 சதவீதம் வெற்றியடையவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் ரோஸ்மண்ட் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை என்பது சின்னம்மை மற்றும் பெரியம்மை ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு இடைநிலை வைரஸ் ஆகும்.

எனவே, பெரியம்மை மற்றும் சிக்கன் குனியாவுக்கு உருவாக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு தடுப்பூசி, குரங்கு அம்மை தொற்று ஏற்படாமல் இருக்க போடப்படுகிறது.

குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்காக, பல நாடுகள் (அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உட்பட) தடுப்பூசிகளை வழங்குகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கொடுக்கப்படும் தடுப்பூசிகள் 100 சதவீதம் வெற்றியடையவில்லை என ரோஸ்மண்ட் லூயிஸ் கூறியுள்ளார் .

குரங்கு அம்மை வைரஸ் அசாதாரணமான முறையில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை, 92 நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது மற்றும் உலகம் முழுவதும் 35,000 பாதிக்கப்பட்ட மக்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இறப்புகள் 12 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில், ‘கிரே ஹவுண்ட்’ வகையைச் சேர்ந்த செல்ல நாய்க்கு, குரங்கு அம்மை வைரஸ் தாக்கியதால், அதை கண்காணித்து வருவதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

குரங்கு அம்மை வைரஸ் மனிதனிடமிருந்து விலங்குகளுக்கு பரவுவது இதுவே முதல் முறை.

மனிதர்களிடம் இருந்து செல்லப்பிராணிகளைத் தாக்கும் வைரஸ் மீண்டும் செல்லப்பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றினால், அது பயங்கரமான பிறழ்வு வடிவத்தை எடுக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் இது பற்றி கவலை கொண்டுள்ளது.

Recent News