பிரித்தானியாவில், ஓமிக்ரான் வைரஸின் ஒரு வகையான எரிஸ் என்னும் கொரோனாவைரஸ் பரவி வருகின்றது.
பிரித்தானியாவில் கோவிடால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 முதல் 16.74 சதவிகிதத்தினர் இந்த எரிஸ் வகை கொரோனாவைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் விளைவாக புதிய கொரோனாவைரஸ் பரவல் காரணமாக மீண்டும் மாஸ்க் அணியும் நிலை உருவாகியுள்ள நிலையில் ஏற்கனவே மக்கள் போட்டுக்கொண்ட தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துவரும் நிலையில், அந்த தடுப்பூசி இந்த புதிய கொரோனாவைரஸுக்கு எதிராக செயற்படுமா இல்லையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் மீண்டும் மாஸ்க் அணியும் நிலை உருவாகலாம் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.