Wednesday, December 25, 2024
HomeLatest NewsWorld Newsபிரித்தானியா வாழ் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு எச்சரிக்கை!!!

பிரித்தானியா வாழ் இலங்கையர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களுக்கு எச்சரிக்கை!!!

பிரித்தானியாவில் வாழும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர்கள் உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்களை இலக்கு வைத்து பாரிய தங்க கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.கடந்த நான்கு மாதங்களில் ஈஸ்ட்லீ மற்றும் சவுத்தாம்ப்டனில் 19 தங்க கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது படுக்கையறையில் இரண்டு ஆண்களால் அலுமாரி வழியாக சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 20,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.மிகவும் திட்டமிட்டு ஒழுங்கமைப்பட்ட முறையில் தெற்காசியர்களை குறி வைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்படுவதாக ஈஸ்ட்லீ மாவட்ட தலைமை அதிகாரி மாட் பாலிங், தெரிவித்துள்ளார்.

அதிக மதிப்புள்ள தங்கம் திருட்டு அதிகரிப்பதை நாங்கள் கண்டுள்ளோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recent News