Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகனடாவில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை!!!

கனடாவில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை!!!

கனடாவில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மத்திய கனடாவில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வெப்ப அலை காரணமாக நாட்டின் மின்சாரக் கட்டமைப்பிற்கு இவ்வாறு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தென் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் வலயங்களில் வெப்ப அலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் மாற்றத்தினால் அதிகளவான வெப்பத்தை மக்கள் உணர நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வெப்ப அலைகளினால் மின்சார கட்டமைப்புக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக கனடிய காலநிலை நிறுவகம் தெரிவித்துள்ளது.ட்ரான்ஸ்போமர்கள் போன்றன அதிக வெப்பம் காரணமாக பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recent News