Friday, January 31, 2025
HomeLatest Newsஒமிக்ரோன் வைரஸ் திரிபு பற்றி விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு பற்றி விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஒமிக்ரோன் வைரஸ் திரிபு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு இரண்டாவது நாளில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியர் ஒருவரை நாடுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் திரிபால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே , காய்ச்சல் ஏற்பட்டு வீட்டில் இருக்கும் நிலைமையில் பரசிட்டமோலை மாத்திரம் கொடுப்பது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News