Thursday, December 26, 2024
HomeLatest Newsஉக்ரைனில் சூடு பிடிக்கும் போர்: இறப்பு விகிதங்கள் அதிகரிப்பு

உக்ரைனில் சூடு பிடிக்கும் போர்: இறப்பு விகிதங்கள் அதிகரிப்பு

உக்ரைன் நிலப்பரப்புக்களை கைப்பற்றும் நோக்கில் கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி ரஷ்ய இராணுவத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை இன்னும் முடிவின்றி தொடர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் இதுவரை தடுப்புப் போர் முறையினை கையாண்டு வந்த உக்ரைன் இராணுவம் தற்போது கடுமையான எதிர்த் தாக்குதல்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 மாதங்களில் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு நிலப் பரப்புக்களில் பெரும் பகுதியை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியிருந்த நிலையில் தற்போது மீண்டும் அவற்றை கைவசப்படுத்தும் வகையில் இராணுவ நடவடிக்கையை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவம் பெரும் பாலும் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும், இருக்கும் ஒரு சில இடங்களில் ஒளிந்திருக்கும் ரஷ்ய இராணுவத்தினரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் இராணுவத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை தற்போதைய போர்க் களத்தில் இரண்டு தரப்புக்களுக்கும் அதிகளவிலான உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இழந்த நிலப்பரப்புக்களை மீளவும் கைப்பற்றும் உக்ரைன் இராணுவம் ரஷ்ய படைகளினால் கைவிடப்பட்ட பல ஆயுத தளபாடங்களையும் கைப்பற்றுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தப் போர் தற்போதைய சூழலில் முடிவுறும் சாத்தியங்கள் எவையும் இல்லை எனவும் எதிர்வரும் 2023ம் ஆண்டளவில் தான் முடிவுக்கு வரும் சாத்தியங்கள் தென்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recent News