Thursday, November 14, 2024
HomeLatest Newsஉடல் எடையை விரைவில் குறைக்க விரும்புகிறீர்களா? இனி மேல் எலுமிச்சை தோலை தூக்கி வீசிடாதீங்க

உடல் எடையை விரைவில் குறைக்க விரும்புகிறீர்களா? இனி மேல் எலுமிச்சை தோலை தூக்கி வீசிடாதீங்க

பழத்தோல்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அவ்வகையில், எலுமிச்சை தோலில் உள்ள நன்மைகள் குறித்து பார்ப்போம்.

உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் எலுமிச்சையில் வைட்டமின் C சத்துக்கள் அதிகமாகவே இருக்கின்றது.

உடல் எடையைக் குறைப்பதற்கு இவற்றின் தோலும் மருத்துவ குணங்கள் கொண்டது.

எனவே எலுமிச்சை தோலை தூக்கி குப்பையில் எரியும் தவறினை இனி செய்யாதீர்கள். அவ்வாறு நாம் தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது.

எலுமிச்சை தோலில் டி லிமோனீன் என்ற தனிமம் உள்ளதால், இவை மனஅழுத்தத்தினை குறைப்பதுடன், உடம்பில் கொழுப்பை குறைப்பதற்கும் உதவி சய்கின்றது.

இதன் தோல்களில் ஃபிளாவனாய்டுகள் காணப்படுவதால், நச்சுக்களை ளெியேற்றுகின்றது. உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்புகளை எரிக்கவும் செய்கின்றது.

மலச்சி்க்கல், செரிமான கோளாறு, வாயுக் கோளாறு என அனைத்திற்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்.

எலுமிச்சை தோலை எடுத்து அதனை 2 லிட்டர் தண்ணீரில் போட்டு சுமார் 30 நிமிடம் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி குறித்த தண்ணீரை காலையில் குடித்து வந்தால் மேலே கூறப்பட்டுள்ள நன்மைகளை அடையலாம்.

Recent News