Thursday, November 21, 2024
HomeLatest Newsதொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க வேண்டுமா? வெறும் தண்ணீர் செய்யும் அற்புதம்

தொப்பை மற்றும் கொழுப்பை குறைக்க வேண்டுமா? வெறும் தண்ணீர் செய்யும் அற்புதம்

தொப்பை மற்றும் கொழுப்பினால் அவதிப்படுபவர்கள், வெறும் தண்ணீரை மட்டும் பருகினால் தீர்வு காணலாம் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக சில நபர்களுக்கு அடிக்கடி பசி எடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இவ்வாறான உணர்வு தான் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

ஆய்வு ஒன்றில், காலை உணவிற்கு அரை மணிநேரம் முன்பு அரை லிட்டர் தண்ணீர் குடித்தால் பசி அடங்குவதுடன், பெரியளவில் பசியும் இருக்காதாம். இவ்வாறு உங்களுக்கும் பசி எடுக்கும் தருணத்தில், ஒரு டம்ளர் தண்ணீர் பருகினால் பசி உணர்வு போய்விடும் என்று தெரியவந்துள்ளது.

நாம் அதிகமாக தண்ணீர் குடிப்பதால், உடலினுள் உள்ள அழுக்குகள் வெளியேறுவதுடன், ரத்தத்தையும் சுத்தப்படுத்துகின்றது.

மேலும் கொழுப்புகள் அகற்றப்படுவதுடன், நீரிழிவு பிரச்சினை வராமல் தப்பித்துக் கொள்ள முடியும். சிறுநீர் பாதையில் கற்கள் வராமலும், உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.

தண்ணீர் பருகுவதினால், வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை நிச்சயம் குறைய தொடங்குகின்றது. தண்ணீர் போதுமான அளவில் எடுத்துக் கொள்வதால், உடற்பயிற்சியின் போது, உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனை சரியான முறையில் விநியோகித்து, நீரிழப்பு ஏற்படுவதையும் குறைக்கின்றது.

Shot of a young Asian woman drinking water from water bottle after jogging in the park.

வயது மற்றும் உடல்நிலைக்கேற்ப தண்ணீர் பருக வேண்டும்.சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் தண்ணீர் குடிப்பது நல்லதல்ல.

அதே போன்று வயதானவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது. இவ்வாறான தொந்தரவு இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரைபடியே தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Recent News