Thursday, January 23, 2025
HomeLatest Newsமிக விரைவாக கருத்தரிக்க வேண்டுமா? டாக்டரின் 5 ஆலோசனைகள் இதோ!

மிக விரைவாக கருத்தரிக்க வேண்டுமா? டாக்டரின் 5 ஆலோசனைகள் இதோ!

குழந்தை என்றால் யாருக்கு தான் பிடிக்காது. திருமணம் முடிந்து சில மாதங்களில் இருந்தே குழந்தை பெற்றுக் கொள்ள உறவினர்கள் எல்லோரும் வலியுறுத்துவார்கள். கணவன் – மனைவிக்கும் இந்த ஆசை இருக்கும். ஆனால் ஏதோ காரணங்களால் கருத்தரிப்பதில் தாமதம் ஏற்படும். இதற்கு மிக முக்கிய காரணம் உடல் ஆரோக்கியம் தான். இயற்கையான முறையில் வேகமாக கருத்தரிக்க வேண்டுமென்றால் நாம் பின்பற்ற வேண்டிய 5 ஆரோக்கிய வழிமுறைகள் குறித்து மகப்பேறியல் மருத்துவரின் ஆலோசனைகள் இதோ

35 வயதுக்குள் திட்டமிடுங்கள்

பெண்கள் தங்களுடைய 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடுங்கள். சமீப காலங்களில் ஆண்களை போல பெண்களும் அதிகமாக வெளியில் சென்று வேலை பார்ப்பதால் குழந்தை பெற்றுக் கொள்வதைத் தவிர்க்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் முதல் குழந்தையை 35 வயதுக்குள் பெற்றுக் கொள்வதற்கு திட்டமிடுங்கள். ஏனெனில் வயதாக வயதாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்கலாம்.

​நீர்ச்சத்துடன் இருங்கள்

உடலை நன்கு நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களுக்கும் சேர்த்து தான். உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்வதும் கருவளத்தை மேம்படுத்த உதவும்.

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 4 முதல் 5 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது.

​ஆரோக்கியமான உணவுமுறை

இயற்கையான முறையில் ஆரோக்கியமாக கரு உருவாகி வளர வேண்டுமென்றால் நம்முடைய உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்றுவது நல்லது.

நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், முழு தானியஙகள் சேர்த்துக் கொள்கிறோாமா அவ்வளவு நல்லது. ஆரோக்கியமான அதேசமயம் சரிவிகித உணவை தேர்வு செய்யுங்கள்.

​தினசரி உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி என்பது ஆண், பெண் இருவருக்கும் மிக நல்லது. தினசரி நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் கார்டியோ பயிற்சிகள் செய்ய வேண்டியது உடலை வலுவாகவும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு போதிய கருவளத்தை உருவாக்கும் வலியையையும் தரும்.

இன்னொரு முக்கியமான விஷயம், தினமும் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உங்களுடைய பாலியல் ஆரோக்கியத்துக்கும் செயல்பாடுகளுக்கும் மிக முக்கியம்.

​எப்போது உடலுறவு கொண்டால் கரு தரிக்கும்?

மேலே சொன்ன 4 விஷயங்களைக் காட்டிலும் இது மிக முக்கியமான விஷயம். கரு உண்டாவதற்கு ஆணும் பெண்ணும் எந்த நாட்களில் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பது முக்கியம்.

கருமுட்டை வளர்ச்சியடைகிற நாட்களில் உடலுறவு கொள்வது தான் கரு உண்டாக உதவி செய்யும்.

அதாவது பெண்ணின் மாதவிடாய் முடிந்து 14, 16, 18 ஆவது நாட்களில் ஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது உடனடியாக கரு தரிக்கும் வாய்ப்புகள் மிக அதிகம்.

Recent News