Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsரஷ்ய புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத்தலைவர் விமான விபத்தில் பலி - வெளியான பகிர் தகவல்..!

ரஷ்ய புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் படைத்தலைவர் விமான விபத்தில் பலி – வெளியான பகிர் தகவல்..!

உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வந்தது.

இந்த சூழலில் உக்ரைன் போரில் திடீர் திருப்பமாக, ரஷ்யாவின் முக்கிய நகரங்களை வாக்னர் படை கைப்பற்றியதோடு அந்நாட்டு தலைநகர் மொஸ்கோ நோக்கி வாக்னர் படை முன்னேறியதால் பதற்றம் நிலவியது.

பின்னர் வாக்னர் படையுடன் பெலராஸ் ஏற்பாட்டில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் கிளர்ச்சியை கைவிட்டார். பின்னர் பெலாரசுக்கு பிரிகோஜின் நாடு கடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஷ்யாவில் ஜனாதிபதி புட்டினுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் உள்பட 10 பேர் விமான விபத்தில் பலியானதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.


இதனிடையே விமான பயணிகள் பட்டியலில் பிரிகோஜின் பெயர் உள்ளதாகவும், ஆனால் உயிரிழந்தவர்களில் பிரிகோஜின் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recent News