Tuesday, January 28, 2025
HomeLatest Newsஅரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு!

அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி என்பன ஆதரவு வழங்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றில் வைத்து தெரிவித்தார்.

எனினும், தேவையற்ற திருத்தங்களை உள்ளடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படின் அதற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமது கட்சி அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Recent News