சிறுமி ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை பார்க்க முடியாது கதறி அழுதுள்ள நிலையில், அவரை அதிபர் மாளிகைக்கு அழைத்து புடின் விருந்தளித்துள்ளார்.
அந்த வகையில், கடந்த சில நாட்களிற்கு முன்னர் ரஷ்யாவின் கட்டுப்பாடில் உள்ள தாகெஸ்தான் குடியரசிற்கு அதிபர் புடின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் பொழுது, அதிபர் புடினை காண்பதற்காக 8 வயதான ரைசாட் அகிபோவா என்ற சிறுமி காத்திருந்துள்ளார்.
ஆயினும், அதிகளவான கூட்டம் காரணமாக புடினை சந்திக்க முடியாமல் போனதால் ரைசாட் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
அதனைக் கண்ட புடின், உடனடியாக சிறுமியை அதிபர் மாளிகையான க்ரெம்ளினுக்கு நேரில் வரவழைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து, அங்கு விழி நிறைய ஆச்சரியத்துடனும், முகத்தில் புன்னகையுடனும் சிறுமி ஓடிச் சென்று புடினை கட்டியணைத்த நிலையில், கன்னத்தில் முத்தமும், பூங்கொத்தும் கொடுத்து புடின் வரவேற்றுள்ளார்.
பின்னர்,புடின் சிறுமியின் கைகளைப் பிடித்து தன் இருக்கைக்கு அழைத்துச் சென்று அங்கு அமர வைத்துள்ளார்.