Thursday, January 23, 2025
HomeLatest Newsகூகுளில் உலக அளவில் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய்க்கு கிடைத்த இடம்!

கூகுளில் உலக அளவில் தேடப்பட்டவர்கள் பட்டியலில் விஜய்க்கு கிடைத்த இடம்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தமிழ் சினிமாவின் வசூல் கிங் ஆகவும் இருந்து வருகிறார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களால் தளபதி விஜய் என கொண்டாடப்படும் அவரை திரையில் பார்க்க ஏராளமான ரசிகர்கள் தவம் இருந்து வருகின்றனர்.

இவரின் புது படத்திற்கும் எதிர்பார்ப்புகள் பெருகி வரும் நிலையில், கூகுள் தேடு பொறியில் உலகளவில் அதிகம் தேடப்படுபவர்களின் பட்டியலில் நடிகர் விஜய், 15 வது இடத்தில் உள்ளார். சென்ற ஆண்டு 19வது இடத்தில் இருந்த விஜய் தற்போது 15 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent News