Tuesday, December 24, 2024
HomeLatest Newsபயங்கரவாத சட்டத்தை நீக்கக்கோரி மட்டுவிலில் கவனயீர்ப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)

பயங்கரவாத சட்டத்தை நீக்கக்கோரி மட்டுவிலில் கவனயீர்ப்பு போராட்டம்!(படங்கள் இணைப்பு)

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்க்கான ஆதரவுப் போராட்டம் மட்டக்களப்பில். இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிமுதல் 12.00மணி வரையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெற்றது.


பயங்கரவாத தடைச்சட்டத்தினை ஒழிப்போம்,பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுக்கான ஆதரவு போராட்டம் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


நாடு தழுவிய ரீதியில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது பயங்கரவாத சட்டத்தினால் பல ஆண்டுகலாக சிறையில் வாடும் அமது உறுவுகளுக்கு மிக விரைவில் விடுதலை கிடைக்கவேண்டும் என்றும் இந்த பயங்கரவாத சட்டம் இலங்கையில் முற்றாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,மாநகர சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழர் கட்சி வாலிபர் முன்னணி ,மதகுருமார்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மக்கள் என பலரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News