பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலாகோட்டில், மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கான மின்சார கட்டணங்களை எதிர்த்து தீ வைத்தது.
PoK அரசாங்கத்தின் அறிவிப்பை புறக்கணித்து பாரிய ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர் . 150 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போராட்டம், அதிக மின்சார வரி, கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் பிற பொதுமக்களின் கவலைகள் போன்ற பிரச்சினைகளை மையமாகக் கொண்டுள்ளது.
அரசு மின் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்தி, பிரச்னைக்கு தீர்வு காண ஒரு குழுவை அமைத்தது.
எவ்வாறாயினும், எதிர்ப்பாளர்கள் இந்த நடவடிக்கைகளை நிராகரித்தனர், தேவையற்ற வரிகள் என்று கருதுவதை முழுமையாக திரும்பப் பெறவும், கில்கிட்-பால்டிஸ்தானுடன் கட்டணங்களை சீரமைக்கவும் கோரினர். தற்போது இந்த போராட்டங்களை அடக்கமுடியாது அரசு திக்குமுக்காடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .