Tuesday, December 24, 2024
HomeLatest Newsஐஸ்கிரீமால் வந்த வினை; ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை

ஐஸ்கிரீமால் வந்த வினை; ஈரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை

ஐஸ்கிரீம் விளம்பரமொன்றில் பெண் ஒருவர் தோன்றிய விதம் தமது கலாசாரத்திற்கு உட்பட்டதாக இல்லை எனத் தெரிவித்து விளம்பரங்களில் இனிமேல் பெண்கள் நடிக்கக்கூடாது என கண்டிப்பான உத்தரவை இட்டுள்ளது ஈரானிய அரசு.

ஈரானில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் அங்கு ஹிஜாப் அணிவது, சமுக ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதை போன்ற வரையறைகள் மிகவும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இந்த விதிகளை மீறும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகளையும் ஈரானிய அரசு வழங்குகிறது.

இந்நிலையில், மேக்னம் (Magnum) ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில் பெண் ஒருவர் தனியாக காரில் பயணிக்கும் போது, பக்கத்து இருக்கையை பார்த்து, சிரிக்கிறார். பின்னர் காரை நிறுத்தி விட்டு இருக்கையில் கைவைத்து, மேக்னம் ஐஸ்கிரீமை எடுத்து காரில் இருந்து வெளியே வந்து ருசித்து சாப்பிடுகிறார்.

இந்த விளம்பரம் குறித்து, ஈரானின் கலாசாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம், ‘ஈரானின் புனித விதிகளை மீறுவதாக இந்த விளம்பரம் உள்ளது.விளம்பரத்தில் வரும் அப்பெண், கண்ணியமாக இல்லை, தளர்வாக ஹிஜாப் அணிந்து கலாசாரத்தை மீறியுள்ளார். ஹிஜாப் மற்றும் ஒழுக்க விதிகளின்படி, பெண்கள் இனி விளம்பரங்களில் நடிப்பதற்கு அனுமதி இல்லை’ எனத் தெரிவித்துள்ளது.

Recent News