Wednesday, January 22, 2025
HomeLatest News2023ம் ஆண்டில் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்! ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள்

2023ம் ஆண்டில் அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன்! ராஜயோகத்தை அடையும் 3 ராசிகள்

பஞ்சம புருஷ யோகங்களில் சிறந்ததாக கருதப்படும் மாளவிகா யோகம் எந்த கிரகத்தினால் ஏற்படுகின்றது? இதனால் ராஜயோகத்தினை அடையும் ராசிகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிடத்தில் கிரக அமைப்பே ஒருவரது யோக பலன்களை நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் மீன ராசியின் உச்சம் பெறும் சுக்கிரன், சுப கிரகங்களுக்கு அள்ளிக்கொடுப்பதில் வள்ளல் ஆவார்.

சுக்கிரன் ஒரு ராசியில் 23 நாட்கள் வசிப்பார் என்று கூறப்படுவதுடன், செல்வம், ஆடம்பர வாழ்க்கை, திருமண வாழ்க்கையில் இன்பம் போன்றவற்றைத் தரக்கூடியவர். இவ்வாறு பலவித யோகத்தினை அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன் சில கொடுதல்களையும் கொடுப்பார் என்பதையும்தெரிந்து கொள்ளுங்கள்.

ஆம் சுக்கிரனுக்கு பகை கிரகமான சூரியனுக்கு அருகில் இருந்தால், அஸ்தம நிலைக்கு சென்றுவிடுவாராம். அதே போன்று செவ்வாய் மற்றும் ராகு கிரகங்களில் சேர்க்கை பெற்றிருந்தாலும் பல கெடுதல்களையும் கொடுப்பார்.

மீன ராசியில் உச்சம் பெறக்கூடிய சுக்கிரன் ஆட்சி செய்யக்கூடிய ரிஷபம், துலாம் ஆகியவற்றில் லக்கினமாக கொண்டவர்கள் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள்.அதே போன்று புதன், சனி ஆகிய கிரகங்களை அதிபதியாக கொண்ட கன்னி, மகரம், கும்பம் ஆகியவை லக்கினமாக கொண்டவர்களுக்கும் நல்ல பலன்களை கொடுப்பார்.

மாளவிகா யோகம் எப்போது ஏற்படும்?

மேஷ லக்கினத்திற்கு 7ம் இடத்தில் ஆட்சி பெற்று இருக்கும் பொழுது, ரிஷப லக்கினத்திற்கும், மிதுன லக்கினத்தில் 10ல் உச்சம் பெற்றும், கடகம் மற்றும் கும்பத்திற்கு 4ல் ஆட்சி பெற்றும், சிம்மம் மற்றும் மகரத்திற்கு 10ம் இடத்திலும், கன்னி மற்றும், துலாம், விருச்சிக லக்கனத்தில் இருந்தால், சுக்கிரனின் சொந்த ராசியான மீன லக்கினத்தில் அமைகின்ற பொழுது மாளவிகா யோகம் ஏற்படும்.

2023ல் சுக்கிரனால் நிகழும் அதிர்ஷ்டம்;

சுக்கிரன் தனுசு ராசியில் புதனுடன் இணைந்து லக்ஷ்மி நாராயண யோகத்தை ஏற்படுத்தி வருகிறார். இதற்குப் பிறகு, சுக்கிரன் மகரம், கும்பம் மற்றும் பிப்ரவரி 2023 இல் மீனத்தில் பெயர்ச்சியாகுவார்.

பிப்ரவரி 15, 2023 அன்று, தனது சொந்த ராசியில் சஞ்சரிப்பதால் மாளவியா சுக்கிரன் தனது சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரிப்பதன் மூலம் மாளவியா ராஜயோகத்தை உண்டாக்குகின்றார், இதனால் எந்தெந்த ராசிகள் அபரிவிதமான பலன்களை பெறுவார்கள் என்பதை கீழே தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்:

மாளவியா ராஜயோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய முன்னேற்றத்தை தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு பெரிய ஒப்பந்தத்தை பெறுவீர்கள். உங்கள் வேலையை மக்கள் பாராட்டுவார்கள். பதவி உயர்வு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரப் பெயர்ச்சி காதல் மற்றும் திருமண வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தனியாக இருப்பவர்களுக்கு துணை கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வெளிநாட்டு பயணம் செல்லலாம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க இதுவே சரியான நேரம். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டும் அற்புதமாக இருக்கும்.

தனுசு:


சுக்கிரனின் ராசி மாற்றத்தால் உருவாகும் மாளவியா ராஜயோகம் தனுசு ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான நாட்களை கொண்டு வரும். சுக்கிரனின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். சொத்துக்களால் ஆதாயம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு. அம்மாவின் ஆதரவும் கிடைக்கும்.

Recent News