Thursday, January 23, 2025
HomeLatest Newsவவுனியா வரும் ரணில் - கேள்விகளைத் தயார் செய்யும் முக்கிய தரப்பு!

வவுனியா வரும் ரணில் – கேள்விகளைத் தயார் செய்யும் முக்கிய தரப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வவுனியா வருகையின் போது காணி உறுதிப்பத்திரங்கள் வழங்குவது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்கள் கோரப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ள நிலையிலே அன்றையதினம் காணி உறுதிபத்திரங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்படுவது தொடர்பாக தகவல் அறியும் சட்ட மூலமாக ஆறு கேள்விகள் அடங்கிய விண்ணப்பம் ஒன்று பிரதேச செயலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பத்திலே வவுனியா மாவட்டத்தில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கைகள், ஒமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரம் வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கை, ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட தெரிவு செய்தவர்களின் பெயர் விபரங்கள், ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உறுதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளவர்களின் விபரம் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முறை, ஜனாதிபதியின் விஜயத்தின் போது ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தின் உறுதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம்,  05வது கேள்வியில் வழங்கப்பட்டுள்ள உறுதிப்பத்திரத்திற்கான ஆட்கள் தெரிவு செய்யப்பட்டதன் முறைமை ஆகிய கேள்விகளிற்கான பதிலிற்காக தகவல் அறியும் உரிமை சட்ட மூலமாக மாவட்ட செயலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதியின் வவுனியா வருகையின் போது ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்திலே 20 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இவை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு நெருக்கமானவர்களிற்கே வழங்கப்படவுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Recent News