Wednesday, January 22, 2025
HomeLatest News20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாரிசு' டிரைலர்!

20 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘வாரிசு’ டிரைலர்!

வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு தமிழ், மற்றும் தெலுங்கில் யு டியூபில் வெளியானது. தமிழ் டிரைலர் தற்போது வரை(17 மணிநேரத்தில்) 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 1.7 மில்லியன் லைக்குகளும் கிடைத்துள்ளது.

24 மணி நேர புதிய சாதனையைப் படைக்க இன்னும் 7 மணி நேரங்கள் உள்ளது. ‘பீஸ்ட்’ டிரைலர் 24 மணி நேரத்தில் 29.04 மில்லியன் பார்வைகளையும் 2.23 மில்லியன் லைக்குகளையும் பெற்று தென்னிந்திய டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. அந்த சாதனையை ‘வாரிசு’ டிரைலர் முறியடிக்குமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

தமிழ் டிரைலரைப் போலவே தெலுங்கு டிரைலருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு டிரைலருக்கு இதுவரையிலும் 2.6 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளது. ‘பீஸ்ட்’ தெலுங்கு டிரைலர் இதுவரையிலும் மொத்தமாக 7.7 மில்லியன் பார்வைகளை வைத்துள்ளது. அந்த சாதனையை ‘வாரிசுடு’ டிரைலர் முறியடிக்க வாய்ப்புள்ளது.

Recent News