Thursday, January 23, 2025
HomeLatest Newsலவ்வில் சிக்கிய ராபர்ட் மாஸ்டரை பேட்டியில் வறுத்தெடுத்த வனிதா!

லவ்வில் சிக்கிய ராபர்ட் மாஸ்டரை பேட்டியில் வறுத்தெடுத்த வனிதா!

பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதாவுடன் காதல் வயப்பட்ட ராபர்ட் மாஸ்டரின் சரமாரியாக விமர்சித்துள்ளார் வனிதா விஜயகுமார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் திகதி, 21 போட்டியாளர்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்துக் கொண்டனர். இதில் முக்கிய போட்டியாளர்களில் ராபர்ட் மாஸ்டரும் ஒருவராக பார்க்ப்பட்டார்.

இவர் பிக் பாஸ் வருவதற்கு பின்புலத்தில் நடிகை வனிதா விஜயகுமார் இருந்தாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து ராபர்ட் மாஸ்டர் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றுக் கொள்வதற்காக தான் பிக் பாஸ் செல்ல முனைந்தார் எனவும் வனிதா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதாவை காதலிப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டில் பல விடயங்களை செய்தார். ஆனாலும் ரக்ஷிதா இவரின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனை பார்த்த வனிதா வீட்டில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு இவருக்கு இது தேவையா மற்றும் பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது எனவும் கடுமையாக விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ராபர்ட் மாஸ்டரை அதே ஊடகம் பேட்டியெடுக்கும் போது, வனிதா கூறியதை கேட்டுள்ளனர்.

இதன்போது கோபமடைந்த ராபர்ட் “அதை வனிதா கேட்பது தான் வேடிக்கையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்கு இரண்டு தடவைகள் சென்றமையினால் வனிதாவிடம் ஆலோசனையை நாடினேன் எனவும் வனிதா கூறியதில் பாதி பொய்யான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recent News