Tuesday, January 28, 2025
HomeLatest Newsஇனி வரும் காலங்களில் புற்றுநோய் சிகிச்சையில் தடுப்பூசிகள்..!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்..!

இனி வரும் காலங்களில் புற்றுநோய் சிகிச்சையில் தடுப்பூசிகள்..!அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல்..!

புற்றுநோய் சிகிச்சையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்றுநோய் மையம், புற்றுநோய்க்கு தடுப்பூசிகள் உட்பட பிற நோய் எதிர்ப்பு சிகிச்சைகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தடுப்பூசிக்கான ஆராய்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக அதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த விடயம் தொடர்பாக சியாட்டில் தேசிய புற்றுநோய் மையத்தின் மூத்த விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் குல்லி, புற்றுநோய் சிகிச்சையில் அடுத்த பெரிய முன்னேற்றம் தடுப்பூசியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல ஆண்டுகளாக வரையறுக்கப்பட்ட வெற்றிக்கு பின்னர், தடுப்பூசி சிகிச்சையை உருவாக்கும் ஆராய்ச்சியில் மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமன்றி, அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவை நோயைத் தடுக்கும் பாரம்பரிய தடுப்பூசிகள் அல்ல என்றும் மாறாக புற்றுநோய் கட்டிகளை சுருக்கவும், புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவும் தடுப்பூசிகளாக இருக்கும் என்றும் டாக்டர் ஜேம்ஸ் குல்லி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News