Thursday, January 23, 2025
HomeLatest Newsபெண்களுக்கு தபால் மூலம் பறந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!திக்கு முக்காடும் பொலிஸார்..!

பெண்களுக்கு தபால் மூலம் பறந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள்..!திக்கு முக்காடும் பொலிஸார்..!

தபால் மூலம் பெண்களிற்கு பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளை அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலுள்ள 65 பெண்களுக்கே தபால் மூலம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த ஆணுறைகள் மெல்பேர்னின் தென் கிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

தபால் அனுப்பபட்ட பெண்கள் அனைவரும், மெல்பேர்னின் கில்ப்ரேடா கல்லூரியில் 1999 ஆம் ஆண்டில் கல்வி கற்றவர்கள் என சந்தேகிக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்தப்பட்ட ஆணுறை தபால் மூலம் அனுப்பப்பட்டமை தொடர்பாக முதல் தடவையாக கடந்த மார்ச் மாதம் பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து இறுதியாக கடந்த திங்கட்கிழமை ஒருவர் இது குறித்து அறிவித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கு வந்த தபால் பொதியில், பயன்படுத்தப்பட்ட ஆணுறையுடன் கையால் எழுதப்பட்ட கடிதமும் அனுப்பப்பட்டிருந்தது.

பாடசாலையின் பழைய வருடாந்த புத்தகம் ஒன்றிலிருந்து முகவரிகள் பெறப்பட்டிருக்கலாம் என பெண்கள் சந்தேகித்துள்ளனர்.

மேலும் இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரு நிலையில், இது குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் அத்தகவல்களை தமக்கு தெரியப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Recent News