கனடாவில் பிரிட்டிங் கொலம்பிய மாகாணத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக குளிப்பதற்கு அதிகளவு நீரை உயயோகிக்க வேண்டாமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்திலுள்ள 34 நீர்நிலைகளில் அரைப் பங்கிற்கும் குறைவான நீர்மட்டமே காணப்படுவதாக அறியப்பட்டுள்ள நிலையிலே இவ்வாறான அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இவ் ஆண்டில் மிக குறைந்த மழைவீழ்ச்சி நிலையே இதற்கான காரணமாக கூறப்பட்டுள்ளது. இந் நிலையில் நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக தற்காலிகமான சட்டங்களை அமுல்படுத்தவும் எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை அனைத்து மக்களுக்குமான குடிநீர் வசதியை ஏற்படுதனதுவதுடன் மக்கள் பொது தலன் நோக்கில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பிரிட்டிங் கொலம்பியா அரசு கோரிக்கை விடுத்துள்ளது.