அண்மைக்காலங்களில் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு விசா கோரி விண்ணப்பித்து இருக்கும் இந்தியர்களின் விசா கோரிக்கைகள் அனுமதிக்கப்படுவதற்கு தாமதமாகி வரும் நிலையில் இந்த சிக்கல்களை தீர்ப்பதற்கும் விரைவில் விசா தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்திய அரசாங்கம் கூடிய அளவு உதவிகளை செய்யும் என கடந்த புதன்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் இடையே ஏற்பட்ட சந்திப்பின் போது இந்த விவகாரம் தொடர்பாக s. ஜெய்ஷ்ங்கர் குறிப்பிட்டு இருந்ததாகவும் அதற்கு, antony blinken, தான் இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் உள்ளேன் எனவும் விரைவில் இந்த சிக்கல்கள் தீர்க்கப்படும் எனவும் உறுதி கூறி இருந்ததாக அறியப்பட்டுள்ளது.
இந்த விடயம் முற்றுமுழுதாக அமெரிக்காவில் தங்கி இருக்கிறது எனவும் எவ்வாறாயினும் இந்தியா தன்னால் முடிந்த அளவில் விரைவாக இந்த நடவடிக்கைகளை செய்வதற்கு உதவும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.