Friday, January 24, 2025
HomeLatest NewsWorld Newsமோதவுள்ள ரஷ்யா அமெரிக்கா - நாசா தெரிவிக்கும் திடுக்கிடும் சம்பவம்

மோதவுள்ள ரஷ்யா அமெரிக்கா – நாசா தெரிவிக்கும் திடுக்கிடும் சம்பவம்

அமெரிக்க பாதுகாப்புத் துறை நாசாவின் தெர்மோஸ்பியர் அயனோஸ்பியர் மீசோஸ்பியர் எனர்ஜெடிக்ஸ் அண்ட் டைனமிக்ஸ் மிஷன் விண்கலம் மற்றும் ரஷ்ய காஸ்மோஸ் 2221 செயற்கைக்கோள் ஆகியவற்றுக்கு இடையேயான நெருக்கமாக கடக்கின்றமையை கண்காணித்து வருகிறது என்று நாசா புதன்கிழமை அதிகாலை ஒரு வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது .

விண்கலம் மற்றும் செயற்கைகோள் ஒன்றுக்கொன்று முட்டாமல் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மோதல் குறிப்பிடத்தக்க சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது,விண்கலம் ஒன்றுக்கொண்று எவ்வளவு நெருக்கமாக வரும் என்ற தகவல்கள் அறிக்கையில் கூறவில்லை.

இரண்டு செயற்கைக்கோள்களும் பிப்ரவரி 28 உள்ளூர் நேரப்படி சுமார் 1:30 pm EST இல் மிக நெருக்கமாக கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் இருந்து சுமார் 373 மைல் (600 கி.மீ) உயரத்தில் இந்த சந்திப்பு இடம்பெற போவதாக நாசா தெரிவித்துள்ளது.

Recent News