Friday, May 10, 2024
HomeLatest Newsஅமெரிக்க அதிபர் தேர்தல் - விவேக் ராமசாமி விலகல் என தெரிவிப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகல் என தெரிவிப்பு.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார்.

பிரதான எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடவுள்ளதால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி இப்போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐயோவா உள்கட்சி தேர்தலில் விவேக் ராமசாமி தோல்வியடைந்த நிலையில், இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் தான் வெற்றி பெற்றால் வெளிநாட்டுப் பணியாளா்களுக்கு ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வழங்கும் நடைமுறைக்கு மாற்றாக,

புதிய முறை அமல்படுத்தப்படும் எனக் குடியரசுக் கட்சியின் போட்டியாளா் விவேக் ராமஸ்வாமி முன்னதாக தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News