உலகின் மிகப் பெரிய இராணுவக் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடானது விதுவேனியா தலைநகர் வில்னியசில் நாளை மற்றும் நாளை மறுநாள் இடம்பெறவுள்ள நிலையி்ல் இவ் மாநாட்டில் நேட்டோ உறுப்பினர்களாக உள்ள பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த மாநாட்டுக்கு கலந்து கொள்வதற்காக அமெரிக்கா அதிபர் நேற்றைய தினம் இங்கிலாந்தைச் சென்றடைந்ததுடன் விதுவேனியாவிற்குப் புறப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் , மன்னன் 3 ம் சார்லஸ் ஆகியோரை சந்திக்கவுள்ளார்
இச் சந்திப்பில் உக்ரைன் போர் நிலவரம் , நோட்டோவில் உக்ரேனை இணைப்பது தொடர்பில் இங்கிலாந்து பிரதமருடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகத் தெரிய வருகின்றது.