Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஏமனின் கடற்படையை குறிவைத்து அமெரிக்க ஏவுகணை கப்பல் தாக்குதல் - ஹூதிகள் விடுத்த எச்சரிக்கை..!

ஏமனின் கடற்படையை குறிவைத்து அமெரிக்க ஏவுகணை கப்பல் தாக்குதல் – ஹூதிகள் விடுத்த எச்சரிக்கை..!

செங்கடலில் யேமனின் கடற்படையை குறிவைத்து அமெரிக்க போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, காபோனுக்கு சொந்தமான வணிகக் கப்பலுக்கு அருகே வெடித்ததாக ஏமனின் ஹூதி குழு தெரிவித்துள்ளது.

காபோனுக்குச் சொந்தமான கப்பல் ரஷ்யாவிலிருந்து பயணித்ததாக செய்தித் தொடர்பாளர் முகமது அப்துல் சலாம் தெரிவித்தார்.

“அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தொடர்ந்து கொடுமைப்படுத்தினால் செங்கடல் எரியும் களமாக இருக்கும். செங்கடல் எல்லையில் உள்ள நாடுகள் தங்கள் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் ஆபத்துகளின் யதார்த்தத்தை உணர வேண்டும்” என்றும் அப்துல் சலாம் கூறினார்.

ஹூதிகளின் தலைவரான அப்தெல்-மாலிக் அல்-ஹூதி, செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படையால் போராளிகள் குறிவைக்கப்பட்டால் ஆயுதமேந்திய குழு அமெரிக்க போர்க்கப்பல்களைத் தாக்கும் என்று புதன்கிழமை எச்சரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News