கடந்த ஒருமாதங்களுக்கு மேலாக ரஷ்யாவின் பாதுகாப்பு படை உக்ரைன் மீது கடும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.
தொடர்ச்சியான போர் நடவடிக்கையில் இரு தரப்பிலும் கடுமையான இழப்புக்களை சந்தித்து வருகின்றனர்.
அதேவேளை இரு தரப்பிற்கு இடையில் மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று நிறைவடைந்த நிலையிலும் இன்று வரை இராணுவ நடவடிக்கை தொடர்கின்றது.
மறுபுறம் ரஷ்யா முன்னெடுத்துள்ள ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதுடன் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவும் ரஷ்யா முன்னெடுத்துள்ள போர் குறித்து தொடர்ச்சியாக பல நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த வாரம் நேட்டோ நாடுகளை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பதைக் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் அதன்பின்னர் ஐரோப்பிய பிரமுகர்கள் அத்துடன் போலந்து மற்றும் பெல்ஜியம் போன்ற நாடுகளுக்கும் தனது இராஜதந்திர விஜயங்களை மேற்கொண்டு பேசியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த செயற்பாடுகள் ரஷ்யாவை மேலும் சீண்டும் விதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.