உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள இராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளையும் விதித்து வருகின்றது.
மேலும் உக்ரைன் அதிபரின் கோரிக்கைக்கு இணங்க குறிப்பிட்ட சில நாடுகள் நேரடியாக உக்ரைனுக்கு ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றது.
இந் நிலையில் அமெரிக்காவும் பொலந்து நாட்டில் நிலை கொண்டுள்ள தமது இராணுவத்தினர் உக்ரைன் எல்லைகளினூடாக உக்ரைன் படைகளை தொடர்பு கொள்வதுடன் அவர்களுக்கு தேவைப்படுகின்ற அவசர இராணுவ ஆயுத உதவிகளை வழங்குவதாகவும் அமெரிக்க இராணுவ தலைமையக பேச்சாளர் John Kirby தெரிவித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்க படைகளிடம் இருந்து இதுவரை இராணுவ பயிற்சிகள் உக்ரைனுக்கு வழங்கப்படவில்லை எனவும் சிறிய ஆயுதங்கள் மாத்திரமே வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.