Saturday, December 28, 2024
HomeLatest Newsசீன விமானங்களை ரத்து செய்யும் அமெரிக்கா

சீன விமானங்களை ரத்து செய்யும் அமெரிக்கா

அமெரிக்காவில் இருந்து சீனாவிற்கும், சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கும் பயணிக்கும் சுமார் நான்கு சீன விமான நிறுவனங்களின் 26 பயணிகள் போக்குவரத்து விமானங்களை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 5ம் திகதி முதல் 26ம் திகதி வரை இடைநிறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் சீன விமானங்கள் அமெரிக்காவின் விமான சட்ட திட்டங்களை மீறி செயற்பட்டமைக்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் மேற்படி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் மேற்படி விமான நிறுவனங்களின் அமெரிக்காவிற்கான விமான சேவை நிரந்தரமாக தடைப்படும் என அமெரிக்க செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Recent News