உக்ரைன் மற்றும் ரஷ்ய போர் ஆரம்பித்து இன்றுடன் 6 மாதங்கள் நிறைவடைகின்ற சூழலில் ஆறு மாத நிறைவையொட்டி உக்ரைனுக்கு சுமார் 3 பில்லியன் பெறுமதியிலான இராணுவ தளபாடங்களை அமெரிக்கா வழங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க செனட் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட நிலையில் அதிபர் ‘பைடனின்’ ஒப்புதலுக்காக மேற்படி உதவி காத்திருப்பதாகவும் அதிபர் ‘பைடன்’ ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக மேற்படி 3 பில்லியன் பெறுமதியிலான இராணுவ தளபாட பொதி உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி ஆயுத பொதியில் அமெரிக்காவின் அதிநவீன ஆயுத உற்பத்திகள் பல அடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.