Tuesday, December 3, 2024
HomeLatest Newsபரபரப்பான நிலையில் தொடர் சந்திப்புக்களில் ஈடுபடும் அமெரிக்கதூதர்;யாழிற்கும் விஜயம்.

பரபரப்பான நிலையில் தொடர் சந்திப்புக்களில் ஈடுபடும் அமெரிக்கதூதர்;யாழிற்கும் விஜயம்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியற் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கடந்த சில தினங்களாக அரசியற் தரப்புக்களையும நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன ஆகியோருடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.

குறித்த சந்திப்புக்களில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசியல் குழப்பங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க தூதர் இரண்டு நாள் பயணமாக இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு வருகைதரவுள்ளதுடன் யாழில் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியற் தரப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News