Sunday, February 23, 2025
HomeLatest Newsஉக்ரைன் போரில் திடீர் திருப்பம்: ரஷ்ய படைகளுக்கு இப்படி ஒரு நிலையா?

உக்ரைன் போரில் திடீர் திருப்பம்: ரஷ்ய படைகளுக்கு இப்படி ஒரு நிலையா?

உக்ரைனில் கடந்த வாரங்களை விட நடப்பு வாரத்தில் ரஷ்ய இராணுவ வீரர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து உக்ரைனிய தேசிய பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உக்ரைனுடன் நடக்கும் போரில் நாள் ஒன்றுக்கு 824 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

தங்களது தரப்பு வீரர்கள் ரஷ்யாவின் தாக்குதலை வலுவாக எதிர்கொண்டு முறியடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியபோது இந்த எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1000இற்கும் அதிகமாக இருந்ததும், பின்னர் வெகுவாகக் குறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News