நாட்டில் தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் 10ம் திகதி வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்கள ஆணையாளர் நாயகம் அதுல கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் மழையுடனான காலநிலை குறைவடையும் என தெரிவித்துள்ளார்.
எனினும், பருவப்பெயர்ச்சி மழை காரணமாக தெற்கு மற்றும் மேல் கடல் பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, மேல், வடமத்திய, மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யும் என தெற்கு ஊடகமொன்றுக்கு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாணம், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளார்.
மத்திய மலைநாடு, வடமத்திய, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வரையில் நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.