Thursday, January 23, 2025

தகுதியற்ற அரிசி நாட்டிற்கு இறக்குமதி;- அமைச்சர் மஹிந்த வெளியிட்ட தகவல்

இறக்குமதி செய்யப்படும் அரிசியை விட சிறந்த தரமான அரிசியை இந்த நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்வதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

போதுமான அளவு அரிசி இல்லாததால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வுக்குத் தகுதியற்ற எந்த வகை அரிசியும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட மாட்டாது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் அரிசி பல பிரிவுகளின் கீழ் சரிபார்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Videos