Monday, January 27, 2025
HomeLatest NewsWorld Newsவரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

பிரேசிலில்(Brazil) உள்ள கிராண்டே டோ சுல் மாகாணத்தில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.குறித்த மாகாணத்தில் பலத்த காற்று வீசியதால் ஏராளமான
மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மூன்றரை லட்சம் பேர் இருளில் மூழ்கி தவிக்கின்றனர்.

அத்தோடு, சுமார்132 பேர் வரையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.இந்நிலையில், வெள்ளம் காரணமாக மாயமானவர்களை மீட்பதற்கான பணிகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பாதுகாப்பான
இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News