Monday, January 27, 2025
HomeLatest Newsஅமெரிக்காவில் வரலாறு காணாத காலநிலை மாற்றங்கள்!

அமெரிக்காவில் வரலாறு காணாத காலநிலை மாற்றங்கள்!

அமெரிக்காவில் வரலாறு காணாத காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தென் மேற்கு பிராந்தியங்களில் அதிகளவான காட்டு தீ பரவி வருவதாகவும், அத்துடன் வெப்பநிலைகள் உச்சம் தொட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய நகரங்களான கலிபோர்னியா, மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பிராந்தியங்களில் காட்டுத் தீ படு வேகமான பரவி வருவதாகவும், பரவும் வேகம் 97 சதவீகிதமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த வாஷிங்டன் பல்கலைக்கழக பேராசிரியரும், உலக காலநிலை அமைப்பின் உறுப்பினருமான “கிரிஷ்டி எபி”, “அமெரிக்காவின் தற்போதைய காலநிலை மாற்றம் எதிர்பாராதது. மிகவும் மோசமாக இருக்கின்றது. அமெரிக்காவின் வரலாற்றில் இதுவரை ஏற்படாத காலநிலை மாற்றம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. காடுகள் எரிந்து கொண்டிருக்கின்றன.

மறு பக்கத்தில் நகரங்களில் வெப்பநிலை 45 செல்லியஷ் என்ற வெப்ப விகிதத்தை தாண்டி சென்று கொண்டு கொண்டிருக்கின்றது.

மக்கள் நீர் நிலைகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்ற சூழல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராட ஒன்றிணைய வேண்டும். வளி மண்டலத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Recent News