தனிப்பட்ட இலாப நோக்கங்களுக்காக சில தரப்பினர் அரிசியை இறக்குமதி செய்வதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
பொலனறுவையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் தலைவர் முதித் பெரேரா, அரசாங்கத்தின் சில கொள்கைகள் காரணமாக அநாவசியமான முறையில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.
சந்தையில், இறக்குமதி செய்யப்படும் அரிசி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதனால், உள்நாட்டு அரிசி விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள சுமார் 750 அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு எந்தவித கட்டுப்பாட்டு விலையும் அறிவிக்கப்படவில்லை என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.