Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉக்ரைன் அணு மின் நிலையத்தை பார்வையிட்ட ஐக்கிய நாடுகள்

உக்ரைன் அணு மின் நிலையத்தை பார்வையிட்ட ஐக்கிய நாடுகள்

ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் அமைந்துள்ள உக்ரைனின் “ஜாபோரிஜியா” என்னும் இடத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் அணு சக்தி ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச அணு விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் நேற்றைய தினம் தமது ஆய்வுகளின் அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தவகையில் மேற்படி அணு மின் நிலையத்தின் பரிசோதனைகள் குறித்து கருத்த தெரிவித்த சர்வதேச அணு சக்தி இயக்கத்தின் தலைவர் ஜெனரல் “ரஃபேல் மரியானோ க்ரோஸி”, “உக்ரைனின் நிலப் பரப்பில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் ரஷ்யாவின் தாக்குதல்கள் காரணமாக சேதங்களுக்குள்ளாகியிருக்கின்றது.

அணு கசிவு ஏற்படுமளவிற்கான சேதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளனவா என்பதைக் குறித்த நுணுக்கமான ஆய்வுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. இந்தவகையில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ரஷ்யா மோசமான வகையில் குண்டுத் தாக்குதல்களை அணு மின் நிலையம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் மேற்கொண்டுள்ளமையானது பாரிய ஆபத்தை ஏற்படுத்துவதாக காணப்படுகின்றது.

இதன் நிமித்தம் எமது குழுவில் இருந்து இரண்டு ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக மேற்படி அணுமின் நிலையத்தை பாதுகாக்கவும், அணு மின் நிலையத்தின் தினசரி செயற்பாடுகளை பதிவு செய்யவும் என தங்க வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய நாடுகள் சபை மூலமாக மேற்கொண்டு வருகின்றோம்.

அவ்வாறு ஏற்படுத்தப்படும் போது ரஷ்யா மேற்படி இடத்தை குறி வைப்பதை தவிர்க்கும் என நாம் நம்புகின்றோம். ஏனெனில் ஐ.நாவின் பணியாளர்களை ரஷ்யாவினால் தாக்க முடியாது என்பது ரஷ்யாவிற்கு தெரியும். நாம் மேற்படி விடயத்தை ஐ.நாவிற்கு தெரிவித்திருக்கின்றோம். முடிவிற்காக காத்திருக்கின்றோம்”. என சர்வதேச அணு சக்தி இயக்கத்தின் லைவர் தெரிவித்திருக்கின்றார்.

Recent News