Wednesday, January 15, 2025
HomeLatest Newsஇலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன் போராட்டம்!

இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு முன் போராட்டம்!

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு உங்கள் கவனம் தேவை’ எனும் தொணிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘கோட்டா கோ ஹோம்’ என கோசமெழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவாக பல உலக நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recent News