ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில்,
தெற்கு உக்ரைனில் உள்ள சபோரிஜியா அணுமின் நிலையத்திற்கு அருகே ஏற்பட்ட மோதல் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனின் லிவிவ் நகரில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோருடன் நடைபெற்ற மாநாட்டில் பொதுச் செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆலைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அது தற்கொலைதான் எனவும் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பை ஆரம்பித்த பின்னர் ஐ.நா பொதுச்செயலாளர் உக்ரைன் அதிபரை சந்திப்பதும் இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.