Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனை - துருக்கி அதிபர் அதிரடி..!

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனை – துருக்கி அதிபர் அதிரடி..!

ஐ.நா. பொது சபையின் 78-வது அமர்வு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்ற துருக்கி அதிபர் எர்ட்கன் பேசும்போது, காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

“பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி நிலைபெற இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் துருக்கி வழங்க தயாராக உள்ளது” என எர்டோகன் தெரிவித்தார்.


ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பங்கு வகிப்பது பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளாக ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் எர்டோகன், காஷ்மீர் பிரச்சனையை எழுப்பி வருகிறார்.


இதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்படுகிறது. “பிற நாட்டின் இறையாண்மையை மதிக்க துருக்கி கற்றுக் கொள்ள வேண்டும்” என இந்தியா
கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Recent News