உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் தரப்பிலும் இழப்புகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களின் குடியிருப்புக்கள் மீது தொடர்ச்சியாக ரஷ்ய படைகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந் நிலையில் உக்ரைனின் பிரதான நகரங்களில் மாரிபோலில் இடம்பெற்ற தாக்குதலில் சிக்கி சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதற்கான தரவுகள் கிடைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உக்ரைனுக்கான மனித உரிமைகள் பொறுப்பாளார் Matilda Bogner தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படைகள் பொதுமக்களை நகரில் இருந்து வெளியேற விடாது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டமை சர்வதேச குற்றம் எனவும் மக்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ரஷ்யாவினால் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.