Thursday, January 23, 2025
HomeLatest Newsரஷ்யாவின் பாரிய போர்க்கப்பலை அழித்த உக்ரைன் கடற்படை !

ரஷ்யாவின் பாரிய போர்க்கப்பலை அழித்த உக்ரைன் கடற்படை !

உக்ரைனின் பெர்டியன்ஸ் நகர் அருகே நங்கூரமிடப்பட்டிருந்த, ரஷ்யாவின் பாரிய போர்க்கப்பலை உக்ரைனிய கடற்படை அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள, மரியுபோல் நகரில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பெர்டியன்ஸ் நகர் அருகே, ரஷ்யாவின் பாரிய போர்க்கப்பலான ஓர்ஸ்க் நங்கூரமிடப்பட்டிருந்ததாக அறியப்படுகிறது .

20 டாங்குகள், 45 கவச வாகனங்கள், 400 துருப்புகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த போர்க்கப்பலை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) உக்ரைனிய கடற்படை அழித்துள்ளதாக அறிவித்திருந்தது .

எனவே, இந்த கப்பல் அழிக்கப்பட்டதனை குறித்து ரஷ்ய தரப்பில் எந்தவிதமான தகவலும் இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதேசமயம் இது சம்மந்தமான புகைப்படங்கள் சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Recent News