Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsகிரீமியாவில் ரஷிய கடற்படை கப்பலை தகர்த்த உக்ரைன் படைகள்..!

கிரீமியாவில் ரஷிய கடற்படை கப்பலை தகர்த்த உக்ரைன் படைகள்..!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகின்ற நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் உதவி செய்கின்றன. போரில் இரு தரப்பிற்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், கிரீமியா பகுதியில் உள்ள பியோடோசியா துறைமுகத்தை குறிவைத்து உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது. விமானத்தில் இருந்து வழிகாட்டி ஏவுகணைகளை வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ரஷிய கடற்படை கப்பல் சேதமடைந்ததாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.

இந்த தாக்குதலின் போது விமான எதிர்ப்பு அமைப்பு மூலம் நடத்தப்பட்ட பதிலடியில் உக்ரைனின் இரண்டு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய கப்பல் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. எனினும், துறைமுகத்தில் தீப்பற்றி எரிவது போன்ற வீடியோக்கள் உக்ரைன் ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

Recent News