Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉக்ரைனின் எதிர்தாக்குதல் போரை முடிவுக்கு கொண்டு வரும்...!அமெரிக்கா நம்பிக்கை...!

உக்ரைனின் எதிர்தாக்குதல் போரை முடிவுக்கு கொண்டு வரும்…!அமெரிக்கா நம்பிக்கை…!

உக்ரைன் – ரஷ்யா போரானது ஓராண்டுகளை கடந்து இடம்பெற்று வரும் நிலையில், கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷ்யா தன்வசமாகியுள்ளது.

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் இழந்த இடங்களை மீட்பதற்காக உக்ரைன் எதிர் தாக்குதலை நடத்தி வருகின்றது.

அந்த அடிப்படையில் இன்றைய நிலவரப்படி ஏழு கிராமங்களை உக்ரைன் மீட்டுள்ள சூழலில் எதிர்தாக்குதலில் இது கூறத்தக்க முன்னேற்றம் என உக்ரைன் நம்புகின்றது.

சில பகுதிகளில் அனைத்து திசையிலும் இருந்து உக்ரைன் பதிலடி கொடுப்பதால் ரஷ்ய வீரர்களால் அதை எதிர்கொள்ள முடியாமையால் அவர்கள் பின் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், உக்ரைனின் வெற்றிகரமான பதிலடி தாக்குதல் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய அதிபர் புடினை தள்ளும் என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிளிங்கன், இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்டோனியா தஜானியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Recent News