Wednesday, December 25, 2024
HomeLatest Newsஇழந்த பகுதிகளை மீட்டெடுக்கும் உக்ரைன்!

இழந்த பகுதிகளை மீட்டெடுக்கும் உக்ரைன்!

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நேற்றைய தினம் தனது நாளாந்த காணொளி வாயிலான அறிக்கையின் போது தெரிவித்ததாவது, “உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தொடர்ந்தும் கடுமையான போர் இடம் பெற்று வருவதாகவும், உக்ரைன் படைகள் தமது ஆக்ரோஷமான பதிலடியை காட்டி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தெற்கில் இரண்டு குடியிருப்புக்களையும், கிழக்கில் மூன்றில் இரண்டு பகுதிகளையும் உக்ரைன் படையினர் கைவசப்படுத்தியிருப்பதாகவும், இவை சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகள் எனவும் மிக குறுகிய காலத்திற்குள் எமது நிலங்கள் எம்மிடம் திரும்பி வந்துள்ளதாகவும் அதற்காக கடுமையாக போராடிய உக்ரைன் இராணுவத்தினருக்கு பாராட்டுக்களும், ஆயுத தளபாடங்களை தந்துதவிய அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளுக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்.

தற்போது ரஷ்ய படைகள் போர்க் களத்தில் மிகவும் பின்மாற்றத்தை சந்தித்து வருவதாகவும், ரஷ்ய படைகளில் வீரர்கள் பற்றாக்குறை காணப்பட்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Recent News