Friday, November 15, 2024
HomeLatest NewsWorld Newsபிரமோஸ் ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க முடியாமல் தடுமாறும் உக்ரைன்……!

பிரமோஸ் ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க முடியாமல் தடுமாறும் உக்ரைன்……!

உக்ரைனுக்கெதிரான பேரில் ரஷ்யா பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆயுதங்களின் மூலம் வழிமறித்து தாக்கினாலும் பிரமோஸ் ஏவுகணை மட்டும் உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடாத்துவதாக அந் நாட்டுப் பாதுகாப்பு வட்டார்கள் அறிவித்துள்ளன.

உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பி்ல் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது.இந் நிலையி்ல் உக்ரைனுக்கு பக்க பலமாக நிதியுதவியுடன் ஆயுத உதவியையும் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் வழங்கின.

ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இன்று வரை போர் தொடர்கையில் உக்ரைனின் சில பகுதிகளை மட்டுமே ரஷ்யாவால் கைப்பற்ற முடிந்துள்ளது. இதேவேளை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரி்க்கும் பிரமோஸ் ரக ஏவுகணைகளை மட்டுமே உக்ரைனால் சமாளிக்க முடியாத நிலை இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் சீறிப்பாயக்கூடிய ஏவுகணையை இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தயாரித்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 20 ம் திகதி உக்ரைனின் ஒடேசா நகரத்தில் ரஷ்யா தனது காலிபர் மற்றும் பி – 800 ஒனிக்ஸ் யாக்ஹான்ட் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடாத்தியது.

இவ் ஏவுகணையானது இலக்குகளைத் தாக்கும் தருணத்தில் மணிக்கு 3000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடியதுடன் இலக்கைத் தகர்க்கும் போது கடல் மட்டத்திலிருந்து 15 மீற்றர் உயரத்தில் பறக்கக் கூடியது. இதேவேளை இதை சுட்டு வீழ்த்துவதும் கடினமான விடயமாக உள்ளது.


இந் நிலையில் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை வாங்குவதற்கு பல்வேறு நாடுகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

Recent News