Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsஅமெரிக்க குண்டுகளை ரஷ்யா மீது முழங்கிய உக்ரைன்..!

அமெரிக்க குண்டுகளை ரஷ்யா மீது முழங்கிய உக்ரைன்..!

ரஷ்யா உக்ரைன் போர் 500 நாட்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் நிலையில் ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த ரஷியாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா கொத்து வெடிகுண்டுகள் எனும் பெருஞ்சேதம் விளைவிக்கும் வெடிகுண்டுகளை வழங்கியது.

இந்நிலையில் கொத்து வெடிகுண்டுகளை சரியான முறையில் உக்ரைன் பிரயோகப்படுத்துவதாகவும், இது நல்ல பலனை தந்து வருவதாகவும், இதனால் ரஷியாவின் ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் முன்னேற முடிவதாகவும் அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

ஆரம்பத்தில் இந்த குண்டுகள் வழங்கப்படுவது குறித்து ”எங்களிடம் போதுமான கையிருப்பு உள்ளது. உக்ரைன் பயன்படுத்தினால், பரஸ்பர தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது” என ரஷியா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent News